குழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன்னோர்கள் பெயர் வைப்பதா , சாமி பெயரா ?இல்லை யாருக்கும் புரியாத மார்டன் பெயரா என பட்டிமன்றமே நடக்கும் . இந்த நேரத்தில் நமக்கு தேவையான , வித்தியாசமான பெயர்களை தருவதற்கு பல இனிய தளங்கள் உள்ளன . அவற்றை இன்று பார்க்கலாம் .
TAMILCUBE:
இது பல்வேறு இணைய பயன்பாட்டினை வழங்கி வரும் தளமாகும் .புத்தகங்கள் , பொது அறிவு , ஜோதிடம் என பல தகவல்கள் இதில் உண்டு அதில் ஒன்றுதான் குழந்தைகள் பெயர்கள் .
இந்த தளம் செல்ல : CLICK HERE
வலைத்தமிழ் :
முன்பு பார்த்த தளம் போல் இதுவும் பல்வேறு வசதிகள் வழங்கும் தளம்தான் . இதில் சினிமா , அரசியல் , இலக்கியம் என பல் வகை செய்திகள் உண்டு . இது ஒரு நல்ல பொழுதுபோக்கு தளம் . இதில் நமக்கு தேவையான எழுத்தில் குழந்தைகள் பெயர்களை தேட முடியும் .
இந்த தளம் செல்ல : CLICK HERE
களஞ்சியம் :
குழந்தைக்கு தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும் என விரும்பும் நபர்களுக்காக உருவாக்கபட்ட தளம் . அருமையான , பொருள் நிறைந்த , அழகான தமிழ் பெயர்கள் இங்கே குமிந்து கிடைகிறது . எந்த எழுத்தில் துவங்க வேண்டும் என்பதையும் , ஆன் அல்லது பெண் குழந்தை என்பதையும் பிரித்து எளிதில் எடுக்கலாம் .
இந்த தளம் செல்ல : CLICK HERE
சிவம் .ORG
இந்த தளத்தில் எழுத்துகள் வாரியாக அழகிய தமிழ் பெயர்கள் வரிசைபடுத்தபட்டு உள்ளது . உங்களுக்கு தேவையானதை எளிதில் தெரிவு செய்யலாம் . அத்துடன் பெயருக்கு என்ன அர்த்தம் எனவும் கொடுக்கபட்டு உள்ளது .
இந்த தளம் செல்ல : CLICK HERE
swayamvaraparvathi.org:
இந்த தளத்தில் நீங்கள் நட்சத்திரம் மூலம் உங்களுக்கு தேவையான பெயர்களை தேடலாம் . இங்கும் பல பெயர்கள் கொட்டிகிடகிறது .
இந்த தளம் செல்ல : CLICK HERE
புரோகிதர் .COM
அழகிய தமிழ்ல் இனிய பெயர் வைக்க வாருங்கள் என அழைக்கும் தளம் இது . இங்கு ஆயிரகணக்கான பெயர்கள் உள்ளது . இதில் ஒரு வசதி பெயர்கள் அடங்கிய பட்டியலை தரவிரக்கிகொள்ளலாம் . இணையம் இல்லாமல் இருக்கும் பொது படித்துகொள்ளமுடியும் .
இந்த தளம் செல்ல : CLICK HERE
indianmirror.com
இந்த தளத்தில் ஆங்கிலத்தில் தான் பெயர்கள் இருக்கும் . இங்கும் பெயர்கள் வரிசைகிரகமாக வைத்துள்ளனர் . நமக்கு தேவையானதை எடுத்துகொள்ளலாம் .
இந்த தளம் செல்ல : CLICK HERE
டிஸ்கி : இதுபோல பல தளங்கள் உள்ளது . உங்களுக்கு தெரிந்த தளத்தை பின்னுட்டத்தில் சொல்லுங்கள்
Comments
Post a Comment