இறைவன் :கல்யாண சுந்தரேஸ்வரர், 01_UserUpload.Net.JPG - 5.9 MB மணவாளேஸ்வரர் இறைவி :பரிமள சுகந்த நாயகி, கௌதகேஸ்வரர் தீர்த்தம்: மங்கள தீர்த்தம், கௌதகா பந்தன தீர்த்தம் புராண பெயர் :திருவேள்விக்குடி ஊர் :திருவேள்விக்குடி மாவட்டம் : மயிலாடுதுறை , தமிழ்நாடு பாடியவர்கள் : சம்பந்தர் , சுந்தரர் செழும் திருவேள்விக் குடியில் திகழ் மணவாள நல்கோலம் பொழிந்தபுனல் பொன்னி மேவும் பினிதத் துருத்தி இரவில் தழும்பிய தன்மையும் கூடத் தண்தமிழ் மாலையில் பாடிக் கொழுந்து வெண்திங்கள் அணிந்தார் கோடிகாவில் சென்று அடைந்தார் – திருஞானசம்பந்தர் தேவார பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் 77 வது தலமாகும் , தேவார பாடல் பெற்ற காவேரி வடகரை தேவார தலங்களில் 23 வது தலமாகும். சிவன் பார்வதி கல்யாணம் நடப்பதற்கு முன் செய்ய வேண்டிய திருமண சடங்குகள், கங்கண தாரணம், யாகம் வளர்த்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் முதலியன இத்தலத்தில் தான் நடைபெற்றன. வேள்வி வளர்த்து யாகம் முதலிய ஏற்பாடுகள் நடைபெற்ற தலமாதலால் திருவேள்விக்குடி என்ற பெயர் ஏற்பட்டது. கோவில் அமைப்பு : கோய...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.