Skip to main content

உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை எப்படி இணைப்பது? எளிய வழிமுறைகள் இங்கே!

 How To Link Aadhar Number To Tamilnadu Eb Connection Full Steps Here

உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை எப்படி இணைப்பது? எளிய வழிமுறைகள் இங்கே!





தமிழக அரசு மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்க பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்காக பயனர்கள் எளிதில் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கும் வசதியை ஆன்லைனில் செய்துள்ளது. இதற்கு வசதியாக லிங்க் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளுக்கு மேல் மின் இணைப்பு வைத்திருக்கும் பயனர்கள், ஒரே ஆதார் எண்ணை ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு எண்களுடன் இணைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிற்க்கும் மேற்பட்ட மின் இணைப்பு எண் வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் ஒரே செல்போன் எண்ணை மட்டுமே கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் இணைப்பிற்கு பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும்... எச்சரிக்கை விடுத்த தமிழக மின்வாரியம்!!
மேலும், உரிமையாளர்களுக்கு மாதாந்திர வாடகை செலுத்தும் வாடகைதாரர்கள் தங்கள் ஆதார் அட்டையை வாடகை இருப்பிடத்தின் மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. Firstcry [CPS] IN அதுபோல, வாடகைக்கு குடியிருப்பவர்களும் தங்களுடைய ஆதார் அட்டைகளை வாடகைக்கு வசிப்பிடமுள்ள மின்சார இணைப்பு எண்ணுடன் இணைக்க முடியும்.

உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க ஏதேனும் சந்தேகம் உள்ளதா? முழு விபரம் இங்கே!!
ஆதார் அட்டையை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க TANGEDCO சார்பில் சிறப்பு ஆன்லைன் லிங்க் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த இணையதள பக்கத்திற்கு https://nsc.tnebltd.gov.in/adharupload/சென்று ஆதாரை எளிதில் இணைக்கலாம்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்... 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என அறிவிப்பு!!

மின் கட்டணத்தை செலுத்தும் போதும் பொதுமக்கள் மின் கட்டணத்தை செலுத்தும் போது ஆதார் எண்ணை கொடுத்து சம்பந்தப்பட்ட மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. Firstcry [CPS] IN பயன்ர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள மின்சாரத்துறை கேட்டுகொண்டுள்ளது. இந்த நிலையில், ஆதார் எண்ணை இணைக்காத பயனர்கள் மின்சார கட்டணம் செலுத்த 2 நாட்கள் அவகாசத்தையும் மின்சாரத்துறை வழங்கியுள்ளது.

பான் கார்டு வைத்திருப்பவர்களே உஷார்... உங்க பான் கார்டு ப்ளாக் ஆக போகுதாம்!
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை எப்படி இணைப்பது? தெரிந்துகொள்ளலாம் வாங்க

முதலில் https://nsc.tnebltd.gov.in/adharupload/ இணையப்பக்கத்திற்கு செல்லவும்.

அதில், Link your service connection with Aadhar என்று இருக்கும் பகுதியை க்ளிக் செய்து கொள்ளவும்.

அதன் பிறகு அடுத்த பக்கத்தில், Service Connection Number என்று கேட்கப்படும் அதில் உங்களுடைய மின் இணைப்பு எண் ( E.B. consumer number) பதிவிடவும்.

தொடர்ந்து Enter கொடுக்கும் போது, அடுத்ததாக திறக்கும் பக்கத்தில், பதிவு செய்யப்பட்ட உங்களது மொபைல் எண்ணின் கடைசி எண் உங்களுக்காக தெரியும். அதனை சரியானதா என்று பார்த்து கொள்ளவும், உடனே அந்த பக்கம் சமர்பிக்கப்பட்டவுடன் அந்த எண்ணிற்கு OTP அனுப்பப்படும்.
அதனை உள்ளிடவும் (உங்களுடைய எண் Register செய்யப்படவில்லை எனில் Tangedco -ன் முகப்பு பக்கத்தை மீண்டும் திறந்து, அதில் Billing Service என்ற பகுதியை கிளிக் செய்து அதில் இருக்கும் Mobile Number Registration என்ற பகுதியை ஓபன் செய்து பதிவு செய்யவும்.

அதற்கு அடுத்ததாக, இந்த இடத்தில், Owner or Tenant என்ற பகுதி இருக்கும். Himalaya Wellness [CPS] IN அதனை நிரப்பவும், தொடர்ந்து Enter கொடுக்கும் பட்சத்தில் உங்களுடைய எண் பதிவாகிவிடும்.

OTP உள்ளிட்ட பிறகு, Enter கொடுத்த பின் திறக்கும் பக்கத்தில், உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அதில் காட்டப்படும். அங்கு கேட்கும் கேப்ட்சாவை உள்ளிடவும். அங்கு உங்களுடைய ஆதார் எண் தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். அதனை சரியாக நிரப்பிய பின்னர், Declaration கேட்கப்படும்.

அதனை கிளிக் செய்து Submit கொடுத்தால் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டதாக காண்பிக்கும்.



Comments

Popular posts from this blog

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க... யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. தொழில் விருத்தி சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா?... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது கால தாமதமோ ஆகிவிடுகிறது தன லாபம் உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம். பரிகாரம்  சின்ன சின்ன தெய்வா...

தஞ்சாவூர்-கும்பகோணம் பைபாஸ் ரைடர்ஸ் பஸ் இயக்கம்

இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே  தேசிய நெடுஞ்சாலை வழியாக புதிய நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இதை மக்கள் மற்றும் பயணிகள் வரவேற்றுள்ளனர்.  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும். இதனால் இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த பேருந்து சேவை ஒரு நாளைக்கு 18 முறை இயக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பேருந்து புறப்படும். தஞ்சாவூரில் இருந்து காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பேருந்து இயக்கப்படும். இந்த புதிய பேருந்துகள் "பைபாஸ் ரைடர்ஸ்" சேவையின் ஒரு பகுதியாக இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் NH 36-ல் தஞ்சாவூர் - சோழபுரம் இடையே இயக்கப்படுகின்றன. 50 கி.மீ தூரத்தை இப...

மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்!

  மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்! மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செம்மங்குளம் அருகே தனியார் பள்ளியில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால் அப்பள்ளிக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கும் இங்குமாக சிறுத்தை நடமாடிக் கொண்டே இருக்கிறது.