வங்கிகளில் பணம் சேமிப்பு இருந்தாலும் கிராம புறங்களில் பெரும்பாலானோர் தபால் நிலையங்களில் பணம் சேமித்து வருகின்றனர். திட்டங்களுக்கு ஏற்றவாறு சிறுக சிறுக சேமித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தபால் வங்கி சேமிப்புக் கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.50-ஆக இருந்தது. ஆனால் இதனை மத்திய அரசு ரூ.500-ஆக உயா்த்தி உத்தரவிட்டது.
அதன்படி, இந்த விதிமுறை ஏற்கெனவே நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், சேமிப்புக் கணக்குத் தொடங்கியவா்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகையை ரூ.500-ஆக உயா்த்திக் கொள்ள டிசம்பா் 11ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
வாடிக்கையாளர்கள் கணக்கில் இருப்புத்தொகையை ரூ.500- இல்லாத பட்சத்தில் அபராதம் பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, அபராதக் கட்டணமாக வாடிக்கையாளா் கணக்கில் இருந்தும் மாதத்திற்கு ரூ.100 வசூலிக்கப்படும்.
அதற்கு ஜிஎஸ்டியும் சேர்த்து வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை நேற்றுமுதல் அமலுக்கு வருவதாக இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. தனி நபர் மற்றும் கூட்டு கணக்கு வைத்திற்குக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 4 சதவிகிதம் வட்டியை கொடுத்து வருகிறது அஞ்சல் துறை.
அதாவது, மார்ச் மாதம் முதல் வாடிக்கையாளர்கள் கணக்கு பணம் ஏதும் இல்லாமல் பூஜ்ஜியத்தில் இருப்பின் பின்னர், கணக்கு காலாவதி ஆகிவிடும்.
எனவே, தபால் அலுவலகங்களின் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவா்கள், சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை ரூ.500-ஆக உயா்த்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 500 ரூபாய்க்கு கீழ் இருப்பு இருந்தால் அந்த கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாது.
தொடர்ச்சியாக மூன்று நிதியாண்டுகளுக்கு மேல் பண பரிமாற்றம் இல்லாமல் இருக்கும் கணக்குகளை மீண்டும் ஆக்டிவேட் செய்ய வடிக்கியாளர்கள் தங்களது விவரங்களை மீண்டும் சமர்ப்பித்து ஆக்டிவேட் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்து.
Tags :post office,post office result 2020 tamilnadu,post office result,post office rd scheme,post office result date 2020,post office result 2020,post office rd plan,post office rd plan 2020,post office fixed deposit,post office recruitment 2020,post office rd,post office fixed deposit scheme,post office rd 2020,post office scheme,post office monthly income scheme in telugu,post office job result,post office rd deposit,post office result tamil,post office interest rate,post office rd calculator
Comments
Post a Comment