பெங்களூரு Bangalore
பெங்களூருவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் இருந்து போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர்.
அதன்படி, கடந்த 13-ந் தேதியில் இருந்து 19-ந் தேதி வரை பெங்களூருவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் வசூலிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தார்கள்.
Traffic Police Bangalore
அதன்படி, கடந்த 13-ந் தேதியில் இருந்து 19-ந் தேதி வரை ஒரு வாரத்தில் பெங்களூருவில் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.4 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுளளது.
Traffic Police Fine Bangalore
கடந்த ஒரு வாரத்தில் விதிமுறைகளை மீறியதாக வாகன ஓட்டிகள் மீது 78 ஆயிரத்து 754 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து ரூ.4 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.


Comments
Post a Comment