causes Symptoms And Prevention Of Migraine Headache ?
பல பிரச்சனைகளால் தலைவலி வருவது போல தலைவலியும் பல வகையில் வருவதுண்டு. முன்பக்க வலி,headache tablets, headache reasons பின் மண்டை வலி, இரண்டு பக் கமும் தலைவலி, ஒற்றை பக்க தலைவலி என்று விதவிதமாய் வரும் தலைவலியில் தொல்லை தருவது மைக்ரேன் தலைவலி எனப்படும் ஒற் றை தலைவலி தான்.
Headache before periods
இவை ஏன் வருகிறது எதனால் வருகிறது, தவிர்க்க முடியுமா? மருத்துவர்கள் தரும் அறிவுரை என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்வோமா?
தலைவலி
உலக அளவில் 50% தலைவலி சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள் என்கிறது மருத்துவ ஆய்வு ஒன்று. ஒரே தலைவலியா இருக்கு என்று பொத்தாம்பொதுவாக ஒரு வலியை சொல்வோம். தலை முழுக்க ஒருவித அழுத்தமும் அசெளகரியமும் உண்டாகும் நிலை எல்லோருக்கும் உருவாவது உண்டு.
தலைக்கு குளித்து ஈரத்தலையுடன் நீண்ட நேரம் இருப்பது, அதிகப்படியான மன உளைச்சல், ஓயாத வேலை, காய்ச்சலினால் வருவது, தலையில் நீர் கோர்த்து கொண்டிருக்கும் போது வரக்கூடியது போன்ற காரணங்களால் உண்டாவது தான் தலைவலி.இவை எப்போதாவதுவருவதுண்டு. வந்த வேகத்தில் கொஞ்ச நேரத்தில் தீவிர வலியை உண்டாக்கி பிறகு வலியும் படிப்படியாக குறைந்து விடும். இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது மைக்ரேன் வலி.
மைக்ரேன் தலைவலி
உலகளவில் 15 சதவீத மக்கள் மைக்ரேன் தலைவலியால் அவதிப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின் றது. எப்போது வெடிக்குமோ என்று அச்சுறுத்தும் அளவுக்கு மண்டையை பிளக்கும் வலியை உண் டாக்கும் மைக்ரேன் வலி. இது நாள்பட்ட நரம்பு வியாதி என்று சொல்லலாம்.
இந்த வலி வந்தவுடன் செல்லகூடியதல்ல சிலருக்கு இரண்டு மணி நேரம்வரை இருக்கலாம். சிலரு க்கு காலை முதல் மாலை வரை இந்த வலி உணர்வு நீடிக்கும். இன்னும் சிலருக்கு 24 மணி நேரம் வரையும் நீடிக்கும். ஆனால் இந்த வலி இருக்கும் ஒவ்வொரு நொடியும் நரகமாய் உணர்வார்கள் வலியால் அவதிப்படுபவர்கள்.
மைக்ரேன் அறிகுறிகள்
இன்ன காரணம் என்று வகைப்படுத்த முடியாமல் பலவிதமான அறிகுறிகள் உண்டாகும். ஒற்றை பக்கமாக வரும் தலைவலி குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் மீண்டும் மீண்டும் வரும். ஒவ்வொரு முறை வரும்போதும் நீண்ட நேரம் வலி உணர்வு இருக்கும். வலியானது சிறிது சிறிதாக அதிகரிக் கும்.தொடர்ந்துஇருக்கும் வலியின் போது பார்வை தெளிவாக இருக்காது. தலைச்சுற்றல், வாந்தி உணர்வு அதிகமாக இருக்கும். மயக்கம் உண்டாவது போன்ற உணர்வுடன் காலை எழும்போதே வாந்தியோடு கூடிய தலைவலி இருந்தால் அது மைக்ரேன் தலைவலி என்பதை உறுதி செய்துகொள் ளுங்கள்.
மைக்ரேன் காரணம்
இது ஒற்றைத்தலைவலி என்பதால் ஒரு பக்கம் தான் வரும் என்பதில்லை. இரண்டு பக்கமும் கூட இருக்கலாம். பரம்பரை வழியாக அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இருந்தால் இந்த தலைவலி உண்டாக லாம். போதுமான தூக்கமின்மை தொடர்ந்து இருக்கும் போது இந்த ஒற்றைத் தலைவலி பிரச்சனை உண்டாகும். போதுமான இடைவெளியில் உணவு எடுக்காத போதும் இந்த தலைவலி உண்டாகும்.
சில உணவுகள் சத்துமிக்க ஊட்டசத்து மிக்க உணவாக இருந்தாலும் கூட சிலருக்கு அது ஒவ்வா மையை உண்டு செய்யும். இதனாலும் இந்த ஒற்றைதலைவலி பிரச்சனை வரலாம். அதிகப்படியாக வெளியில் செல்லும் போது அதிக நேரம் நேரடி வெயிலில் இருக்கும் போதும் இந்த தலைவலி தொடரலாம்.
மைக்ரேன் வகை
கிளாசிக்கல் மைக்ரேன் என்னும் போது தலைவலி வரும் போது கண்ணுக்கு முன்னாடி பூச்சி பறப் பது போன்ற உணர்வு இருக்கும் சில நேரங்களில் கலர் கலராக வண்ணங்கள் போன்ற பிம்பங்கள் உருவாகும்.
நமது வலது பக்க மூளை இடதுபக்கம் கை கால்களை கண்ட்ரோல் செய்கிறது. இடது பக்கம் மூளை வலது பக்கம் இருக்கும் கை, கால்களை கண்ட்ரோல் செய்கிறது. தீவிர மைக்ரேன் வலியாக இருக் கும் போது ஒருபக்கம் கை, கால்களின் பலம் குறைவதை உணரலாம். நியூராலஜிக் மைக்ரேன் என்று சொல்கிறார்கள். ஆனால் இது பெரும்பாலானவருக்கு வருவதில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.




Comments
Post a Comment