-
அனைவருக்குமே பண்டிகை காலங்களில் ரயிலுக்கு முன் பதிவு செய்வது என்பது பெரிய தலைவலி. மூன்று நிமிடங்களில் அனைத்து பயணச்சீட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விடும்.இதில் நான் கூறப்போவது பண்டிகை காலங்களுக்கான முன்பதிவுக்கு மட்டுமல்ல அனைத்து காலங்களுக்குமானது. Image Credit – YourStory.comஇதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மூன்று பணிகள்ஒன்றுIRCTC Rail Connect செயலியை (App) நிறுவ வேண்டும்.இரண்டுhttps://www.irctc.co.in –> My Profile –> Masters List க்கு சென்று உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயர், வயது, இருக்கை / படுக்கை தேர்வு (UB,MB,LB,SLB), ஆதார் எண் போன்றவற்றைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.ஆதார் எண் என்றல்ல, அனுமதித்துள்ள எந்த அடையாள விவரங்களையும் பதிவு செய்யலாம்.மூன்றுநமக்கு மிகவும் நேரம் எடுக்கும் செயலாக இருப்பது பணம் செலுத்தும் பகுதி தான்.எனவே, அதைத் தவிர்க்க IRCTC யில் உள்ள eWallet ல் நாம் ஊருக்குச் செல்வதற்கான பணத்தின் அளவை இதில் முன்பதிவு செய்வதற்கு முன்பே சேர்த்து விட வேண்டும்.நான் இதற்குப் பதிலாக Paytm பயன்படுத்துகிறேன் காரணம், Paytm ல் உள்ள மீத பணத்தை நான் வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்த முடியும் ஆனால், IRCTC eWallet ல் முடியாது.எனவே, Paytm வைத்து இக்கட்டுரையை விளக்குகிறேன், IRCTC eWallet நான் பயன்படுத்துவதில்லை என்பதால், அது குறித்து எனக்குத் தெரியாது.எப்படிப் பயணச்சீட்டு முன்பதிவு செய்வது?மேற்கூறியவற்றைச் செய்து விட்டீர்கள் என்றால், நீங்கள் விரைவான முன்பதிவுக்குத் தயாராகி விட்டீர்கள்.தற்போது IRCTC Rail Connect செயலியில் உங்கள் பயனர் கணக்கை பயன்படுத்தி நுழைந்து கொள்ளுங்கள்.நீங்கள் செல்லும் இடம், தேதி, ரயிலை தேர்வு செய்த பிறகு, பயணம் செய்பவர்கள் பற்றிய விவரங்கள் பகுதி வரும்.இதில் மேலே வலது புறத்தில் கூட்டல் குறியுடன் ஒரு படம் இருக்கும், அதைச் சொடுக்க வேண்டும்.அதில் நீங்கள் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் காண்பிக்கும்.இதில் இருக்கும் Radio Button தேர்வின் மூலம் யார் பயணிக்கிறார்களோ அவர்களது பெயர்களைத் தேர்வு செய்து Done கொடுத்தால் போதுமானது.இந்த முறை மூலம் இரு பயன்கள் LEARN TELUGU BOOK DOWNLOADஒன்று, இரு நொடிகளில் பயணிப்பவர்கள் பெயர்களை இணைத்து விடலாம்.இரண்டாவது, அவசரத்தில் தட்டச்சு செய்யும் போது எழுத்து / வயது பிழைகளைத் தவிர்க்கலாம்.இவற்றை முடித்து உங்கள் பயண விவரங்களைச் சரிபார்த்து Payment பகுதிகளுக்கு வந்த பிறகு, உங்களுக்கு மூன்று தேர்வுகள் இருக்கும்.1. e-Wallets2. Other Payment Options3. Pay On Delivery (இது நாம் பயன்படுத்தப்போவதில்லை)முதல் e-Wallets தேர்வில் IRCTC Wallet உட்படச் சில இருக்கும், நீங்கள் எது பயன்படுத்துகிறீர்களோ அதைத் தேர்வு செய்து கொள்ளலாம்.LEARN TELUGU BOOK DOWNLOADநான் இரண்டாவது வசதியான Other Payment Options ல் Paytm தேர்வு செய்வேன்.இதில் Paytm தேர்வு செய்தவுடன் உங்கள் திறன்பேசிக்கு OTP எண் வரும்.Paytm உங்கள் OTP எண்ணைத் தயாராக வைத்து இருக்கும், நீங்கள் உங்கள் குறுந்தகவல் பகுதியில் இருந்து OTP யைத் தேடி அதைத் தட்டச்சு செய்யத்தேவையில்லை.முன்னரே கூறியபடி, நீங்கள் ஏற்கனவே பணத்தை Wallet ல் போட்டு தயாராக வைத்து இருந்தால், உடனே பணம் செலுத்தப்படும்.இல்லையென்றால் உங்கள் கடனட்டை மூலம் செலுத்த வேண்டும். இது உங்களுக்குக் கூடுதல் வேலை, விரைவில் நடந்து விடும் என்றாலும், சில நொடிகள் கூடுதலாகும்.ஒவ்வொரு நொடியும் முக்கியம்LEARN TELUGU BOOK DOWNLOADசில நொடிகள் தாமதத்தில் கூட நீங்கள் பயணசீட்டை இழக்க வேண்டியது வரும். எனவே, ஒவ்வொரு நொடியும் நமக்கு முக்கியம்.பணம் செலுத்தப்பட்டவுடன் உடனடியாக உங்கள் பயணச்சீட்டு முன்பதிவு முழுமையடைந்து, வழக்கம் போல உங்களுக்கு IRCTC யில் இருந்து குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் வந்து விடும்.அதிகபட்சம் 70 / 80 நொடிகள்LEARN TELUGU BOOK DOWNLOADமேற்கூறிய அனைத்தும் அதிகபட்சம் 70 / 80 நொடிகளில் செய்து விடலாம் . உங்கள் இணைய இணைப்பு சரியான வேகத்தில் இருக்க வேண்டியது அவசியமானது.பற்று அட்டை, கடனட்டை மூலம் பணம் செலுத்துவதற்கு நம் விவரங்களை அளிக்க வேண்டும் என்பதால், இதற்கு நேரம் எடுக்கும். இம்முறை அவசர முன்பதிவுக்குச் சரிப்பட்டு வராது.IRCTC தற்போது Paytm Gateway வழியாகச் செயல்படுகிறது.கூடுதல் நேரமெடுக்கும் பற்று, கடனட்டைகள் (Debit & Credit Cards) & Net BankingNet Banking வழியாகச் செலுத்துவதற்கு நீங்கள் உங்கள் பயனர் கணக்கு விவரங்களை அளித்து நுழைந்து, பணத்தை அனுமதித்துச் சில நேரங்களில் OTP வருவதில் தாமதம் ஏற்படுகிறது.பற்று / கடனட்டைகள், Net Banking முறைகள் கூடுதலாக 20 முதல் 45 நொடிகள் வரை எடுத்துக்கொள்ளும், நீங்கள் தட்டச்சு செய்யும் வேகத்தைப் பொறுத்து. இதில் வரும் எழுத்து மற்றும் எண் பிழைகள் நேரம் தனி.எனவே தான் நான் Paytm பரிந்துரைக்கிறேன்.இதில் நீங்கள் தட்டச்சு செய்யும் வேலை இல்லை. உங்களுக்கு Paytm கணக்கு இல்லையென்றால் உருவாக்கி Paytm செயலியை நிறுவிக்கொள்ளுங்கள்.விரைவாக IRCTC யில் முன்பதிவு செய்ய, உங்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.கொசுறுIRCTC பயனர் கணக்கு மாதத்துக்கு அதிகபட்சம் 6 முறை மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கும். எனவே, முன்னரே சரிபார்த்துக்கொள்ளுங்கள்.பதிவு செய்யும் நேரத்தில், அதிகபட்ச எண்ணிக்கையை தாண்டி விட்டது என்ற செய்தி வந்தால், முன்பதிவு செய்ய முடியாது.LEARN TELUGU BOOK DOWNLOADஎவ்வளவு தயாராக இருந்தாலும், இதில் ஏமாந்து விட வாய்ப்புள்ளது. எனவே, கவனம்.
மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்! மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செம்மங்குளம் அருகே தனியார் பள்ளியில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால் அப்பள்ளிக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கும் இங்குமாக சிறுத்தை நடமாடிக் கொண்டே இருக்கிறது.
Comments
Post a Comment