Skip to main content

ஹோட்டலில் போய் சாப்பிடுறவன் எவன்?

ஹோட்டலில் போய் சாப்பிடுறவன் எவன்? - நிர்மலா சீதாராம்.



TNPSC GROUP 2A SYLLABUS & QUESTION PAPERS DOWNLOAD



ஆணவ திமிர் பிடித்த அமைச்சருக்கு...ஒரு விளக்கம்..

இங்கிலாந்து நாட்டில் மேல் படிப்பு படிக்க செலவு செய்யும்
 வசதியுள்ள குடும்பத்தில் பிறந்து ஆந்திராவில் காங்கிரஸ் அமைச்சரின் மகனை  காதல் திருமணம் செய்து கொண்டு.. பிறந்த நாளில் இருந்து இன்று வரை பசி - பட்டினி - சமையலறை - கழிவறை இல்லாத பத்து அடி அறை - கைக்கும் வாய்க்கும் எட்டும் அளவான கூலி ... என்று எதையும் அறியாத தமக்கு
ஹோட்டலில் சாப்பிடுறவன் எவன் என்று தான் கேட்க தோன்றும்.



என் வாழ்க்கையில்  24  வயதில் பாம்பாயில் வாழ்ந்து கொண்டு இருந்தேன் .. அன்று ஒரு நாள்..

அலுவலகத்திற்கு சென்ற என்னோடு இன்னும் மூன்று பேர். நால்வருமே தமிழகத்தில் இருந்து பிழைப்புக்காக பாம்பே சென்றவர்கள். தம்மை போல் இங்கிலாந்து சென்று படிக்க எங்கள் பெற்றோர்கள் அரசியல் ஆதாயம் கொண்டவர்களாய் இல்லாவிடினும் . அவர்களின் கடின  உழைப்பால் அவர்கள் செய்த தியாகத்தினால்  நாங்கள் நால்வருமே அவரவர் துறையில் முதுகலை பெற்றவர்கள்.

சம்பளம் .. ஆளுக்கு 2 ,500  மாதத்திற்கு..

தங்கியதோ பத்துக்கு பத்துக்கு என்ற அறை. காலையில் ஆறு மணிக்கு முன்னால் நாங்கள் விளக்கையோ மற்றும் சத்தம் எதுவும் போட கூடாது. வீடு உரிமையாளரின்  எழுதாத சட்டம்.




அதை கூட விடுங்கள்.. உரிமையாளரின் பிள்ளைகள் உபயோக படுத்திய பின் தான் நாங்கள் எங்கள் காலை கடனையே முடிக்க இயலும். இப்படி இருக்கையில் ..

ஒருவனின் தகப்பன் சுகவீனமாக மருத்துவமனையில்... இவன் சம்பாதித்த மொத்த  பணமும் ஒன்றாம் தேதியே அப்பாவின் மருத்துவ செலவிற்கு.

இன்னொருவன்.. தன் தங்கையை உணர்ச்சிவசப்பட்டு பொறியியல் கல்லூரில் சேர்த்து விட்டான் . விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல்..  ஒவ்வொரு ரூபாயையும்.. ஆயிரத்துக்கு சமம்..

அடுத்தவன்... பாம்பேயில் மேல் படிப்பு.. மற்ற மூவரும்  சேர்ந்து கொஞ்சம் உதவி செய்ய கல்லூரியில் சேர்ந்து விட்டான்.. புலி வாலை பிடித்த கதை.. இப்போது விட முடியாது..

இந்த மூன்று மட்டும் போதும்.. என் கதையை விடுங்கள்..

பண நெருக்கடி அனைவருக்கும் வர .. எப்படி கொஞ்சம் காசையோ மிச்ச படுத்தலாம்  என்று எண்ணி வந்த எண்ணம் தான்.. ஹோட்டலில் சாப்பிடுவதை விட்டு விட்டு அறையிலே சமைக்கலாம் சென்று.

ஐயோ.. காலையில் 7 மணி போல் நால்வரும் இல்லத்தை விட வேண்டுமே... அப்படி என்றால் சமையலை 5  போல் துவங்கினால் தானே.. இங்கே விளக்கையோ சத்தமோ போடக்கூடாதே.. என்ன செய்வது .. என்று யோசிக்கையில்..

கருப்பு துணி ஒன்றை வாங்கி சன்னலை மூடி.. மண்ணெண்ணெய் அடுப்பு வாங்கி இருட்டில் சமைக்க ஆரம்பித்தோம்..இரன்டு நாளில் கிட்ட தட்ட 70 ருபாய் மிச்ச பிடித்த எங்கள் இன்பத்திற்கு அளவே இல்லை.

மூன்றாவது நாள்.. சமைக்கையில் 5:30 மணிக்கு கதவு தட்டும் சத்தம் கேட்டது.. கத்திரிக்காய் சாம்பாறை இறக்கி விட்டு சாதம் கொதிக்கும் நேரம்.. கதவை திறந்தால் உரிமையாளர்.. கையும் களவுமாக பிடிபட்டோம்..

நான் நேத்தே யோசித்தேன்.. நீங்க சமைக்க ஆரம்பிச்சிடீங்கனு.. என்ன வாசனை..?

அட பாவி.. விளக்கையும் சத்தத்தையும் கவனித்த நாங்கள் வாசனையை மறந்து விட்டோம்.

முஜே மாப் கரோ பாய் சப் ...( தமிழ் நாட்டில் இருக்க வரைக்கும் எங்களுக்கும் ஹிந்தி தெரியாது.. ஆனா நாங்கள் தமிழும் ஆங்கிலமும் தெரியுமேனு பெருமை பட்டோமே ஒழிய ஹிந்தி தெரியலையேன்னு வெட்க  படலை. பாம்பே போய்  ஆறே மாசத்துல அவன் மொழியும் அவனுக்கு  புரியிற அளவுக்கு  கத்துக்குனோம்.. ) இனிமேல் செய்ய மாட்டோம்.

பரவாயில்லை செய்யுங்க.. ஆனால் ஆளுக்கு வாடகை 150  ருபாய் போட்டு கொடுங்க..

கூட்டி கழித்து பார்த்ததில் கணக்கு எங்கேயோ அடி வாங்க..

வேண்டாம் பாய் சாப்.. நாங்க சமைக்கல என்று சொல்லிவிட்டு மீண்டும் ஹோட்டலில் சாப்பிட ஆரம்பித்தோம்.

அப்படி தான் எங்கள் ஹோட்டல் தொடர்ந்தது.. அரசியல்வாதிகள் இல்லத்தில் வளர்ந்த - வாழ்ந்த இதுவரை வாடகையே காட்டாமல் இருந்த தமக்கு இது கண்டிப்பாக தெரியாது..

சரி.. நாங்கள் நால்வர் தானே இப்படி ஆரம்பித்தோம்.. இன்று பாம்பேயில் எங்களோடு அமர்ந்து உண்ட மற்ற சிலரை கவனிக்கலாம்.

அடுத்த மேசையில்.. அப்போது தான் டாடர் ஸ்டேஷனில் இருந்து இறங்கி வந்த ஒரு குடும்பம். மொத்தம் ஆறு பேர்.. டாடரில் இறங்கிய அவர்கள் இன்னொரு லோக்கல் ட்ரைன் பிடித்து இல்லத்தை அடைய இன்னும் ரெண்டு மணி நேரம்.. பசி தாங்காதே.. ஊரில் இருந்து வரும் போது புலி சோறு.. தயிர் சோறு என்று 24  மணி நேரத்திற்கு எடுத்து வந்து இருப்பார்கள்.. அது தீர்ந்தவுடன் இங்கே..

படிக்கும் வயதிலே அரசாங்க செலவில் விமான பயணம்,  இலவசமாக ரயிலில் AC மற்றும் முதல் வகுப்பு  பிரயாணம்.. காரை எடுத்தால் கிலோமீட்டருக்கு இவ்வளவு என்று அரசாங்கம் தரும் பணம்...    பாவம் தங்களுக்கு இந்த வலி புரிய வாய்ப்பில்லையே..

மூன்றாவது  மேசையில்.. நான்கு திரு நங்கைகள்.. அவர்களுக்கு இல்லமே இல்ல .. சமையலறை எங்கே... AC காரில் கருப்பு கண்ணாடி போட்ட ஜன்னலில் உள்ள அமர்ந்துள்ள வசதியானவர்களுக்கு வெளியே இருப்பவர்களை எப்படி தெரியும்.... அவர்கள் காரின் அருகில் வந்தவுடனே.. ஜன்னல் சரியாக மூடியிருக்கிறதா  என்று பார்க்கவே நமக்கு நேரம் இல்லையே..

அடுத்த   பெஞ்சில்... அந்த ஹோட்டலில் பணியாற்றுபவர்கள்.

கடைசி பெஞ்சில் நாட்டில் இராணுவ சீருடையை அணிந்த ஒருத்தன். ஒரு இரும்பு பேட்டி அதில் அவன் பெயர். அவன் முகத்தை பார்த்தா வீட்டை விட்டு திரும்பவும் பணிக்கு போகின்றது போல தெரிகின்றது. அவ்வளவு சோகம்.
அமைச்சருக்கும் MLA  க்கும் கிடைக்கும் இலவச வசதியில் சுவிஸ் ஐரோப்பிய நாட்டுக்கு விடுமுறை செல்லும் தங்களுக்கு இவனும் எவனோ என்று தான் தெரியும்.


இங்கே இருந்த அனைவருக்குமே அங்கே உண்ண விருப்பம் இல்லை. உந்த பட்டோம். வேறு வழியில்லை,.

நீங்கள் .. எங்களுக்கு உதவி செய்யாமல் இருக்கலாம்.. ஆனால் உபத்திரவம் செய்ய வேண்டாம்..

ஹோட்டலில் சாப்பிடுறவன் எவன் .. இப்பவாது புரிந்து இருக்கும்  என்று நினைக்கின்றேன்.

பின் குறிப்பு : TNPSC GROUP 2A SYLLABUS & QUESTION PAPERS DOWNLOAD

மாமனார் மாமியார் காங்கிரஸ் கட்சியில் ஆந்திராவில் கொடி கட்டி பறக்கையிலே .. நீங்க பிஜேபி யில் இருக்கையிலே.. எல்லாம் சுபமா நடக்கும் போது.. திடீர்னு அந்த கூத்தாடி சிரஞ்சீவி ஒரு கட்சி ஆரம்பிக்க , அட பாவி ஒரு வேளை இவன் முதல்வரான என்ன பண்றது? அதனால  உங்க ஆத்துக்காரு அந்த கட்சில போய் சேர .. அந்த கட்சி உருப்புடாம போனவுடன்.. திரும்பவும் அவரும் பிஜேபி யில் வந்து சேர .....

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நம்ம  தான் ஆட்சியில் இருப்போம் என்று வாழும் குடும்பத்தில் வந்த தாங்கள் எங்களை எவன் அவன் என்று அழைக்கின்றீர்கள்..

நாங்களும் "எவ அவ" என்று சொல்லும் நாள் வரும் சீதாராமன் அவர்களே..
வரும்...!
TNPSC GROUP 2A SYLLABUS & QUESTION PAPERS DOWNLOAD
ஆனால் அப்போதும் கூட நாங்கள் தங்களை போல் தரம் தாளாமல் மரியாதையாக தான் இருப்போம். ஏன் என்றால்..

நாங்கள் ஹோட்டலில் சாப்பிட்டு உயிர் பிழைத்தவர்கள் ...

Comments

Popular posts from this blog

மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்!

  மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்! மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செம்மங்குளம் அருகே தனியார் பள்ளியில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால் அப்பள்ளிக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கும் இங்குமாக சிறுத்தை நடமாடிக் கொண்டே இருக்கிறது.

Free Rudraksha Diksha Kit From Isha Foundation

WhatsApp Group Join Now Telegram Group Join Now   Free Rudraksha Diksha Kit From Isha Foundation Get a free rudraksha diksha kit energized by Sadhguru on Mahashivratri. Bring home the Grace of Shiva through Rudraksha Diksha. What is Rudraksha? Rudraksha is the teardrop of Shiva. The legend goes that once, Shiva sat for meditation for a long period of time. His ecstasy was such that it made him absolutely still, unmoving. He seemingly did not even breathe, and everyone thought he was dead. There was only one sign of life – the tears of ecstasy that dribbled from his eyes. These teardrops fell upon the earth and became Rudraksha, ‘Shiva’s tears. To get Rudraksha kit you need to register and give your shipping address details. There are no shipping charges to get this kit. It is supportive for physical and mental balance, assists in meditation, cleanses the aura and shields against negative energies. The kit contains the following materials...

Friends Track Call Taxi & Cabs in Mayiladuthurai Mayiladuthurai 𝑀𝑎𝑦𝑖𝑙𝑎𝑑𝑢𝑡ℎ𝑢𝑟𝑎𝑖'𝑠 𝑁𝑜. 1 𝐶𝑎𝑙𝑙 𝑇𝑎𝑥𝑖 !! உங்கள் பயணத்தை மகிழ்ச்சியாக்குங்கள் மிக மிக குறைந்தக் கட்டணத்தில்

  𝑀𝑎𝑦𝑖𝑙𝑎𝑑𝑢𝑡ℎ𝑢𝑟𝑎𝑖'𝑠 𝑁𝑜. 1 𝐶𝑎𝑙𝑙 𝑇𝑎𝑥𝑖 !! WhatsApp Group Join Now Telegram Group Join Now share button.txt Displaying share button.txt. உங்கள் பயணத்தை மகிழ்ச்சியாக்குங்கள் மிக மிக குறைந்தக் கட்டணத்தில் Book Car Now 𝑀𝑎𝑦𝑖𝑙𝑎𝑑𝑢𝑡ℎ𝑢𝑟𝑎𝑖'𝑠 𝑁𝑜. 1 𝐶𝑎𝑙𝑙 𝑇𝑎𝑥𝑖 !! உங்கள் பயணத்தை மகிழ்ச்சியாக்குங்கள் மிக மிக குறைந்தக் கட்டணத்தில்... WhatsApp Group Join Now Telegram Group Join Now share button.txt Displaying share button.txt. JOIN SHIRTS COLLECTION WHATS AP GROUP -  CLICK TO JOIN  #FriendsTrack #mayiladuthurai Call Taxi Service #Calltaxi Service #Taxi #TaxiTie #TIEUP #FriendsTrackTaxi #lowCost #LowCostTaxi #TaxiService #Cab #mayiladuthuraidistrict #airportpickup #AirportDrop #Sirkazhi #Kumbakonam #BestCab #LowCostCab #LowCostTaxi #TourTravel #Transport #Travels #Car #Rental_Car #RentalCar #Rent_Car #mayavaram ...