ஸ்பேம் அழைப்புகள்: நான்காவது இடத்தில் இந்தியா என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும், கைபேசி பயனர்களுக்கு ஏதோ ஒரு வகையில் சோதனை வரத் தான் செய்கிறது. காலை முதல் இரவு வரை என இந்திய கைபேசி பயனர்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற அழைப்புகளின் துயரத்தை சொல்லித் தீராது. அந்த அளவிற்கு இந்திய பயனர்கள் ஸ்பேமர்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். வேண்டாம் என்றாலும், விடாமல் துரத்தும் ஸ்பேம் அழைப்புகளை தடை செய்தாலும், வேறொரு எண்ணின் மூலம் மீண்டும் தொடர்புகொண்டு நம்மை தொந்தரவு செய்யும். அப்படியான ஸ்பேம் அழைப்புகளை குறித்து பகுப்பாய்வு நடத்தியிருக்கும் ட்ரூ காலர் நிறுவனம், அதிர்ச்சியளிக்கும் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், ஒரு நபர் சராசரியாக மாதத்திற்கு 17 ஸ்பேம் அழைப்புகளை எதிர்கொள்வதாக தெரிவித்திருக்கிறது. ஸ்பேம் அழைப்புகளின் தாக்கத்தை அதிகளவில் இந்திய கைபேசி பயனர்கள் எதிர்கொண்டு வருகின்றனர் என்று கூறும் ட்ரூ காலர், ஸ்பேம் அழைப்புகளை எதிர்கொள்வதில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளதாக தனது பகுப்பாய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில், ஒரு ஸ்பேமர் மூலம் 20 க...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.