பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 28-ந் தேதி, கடந்த 3-ந் தேதி, 7-ந் தேதி என 3 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, நாளை 55 மையங்களில் நடக்கிறது. மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள அறைகளில் தலா 7 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் உள்ள 14 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளும் ஒரே ஒரு மையத்தில் எண்ணப்படுகிறது.இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதலில் துணை ராணுவப்படையும், இரண்டாவதாக பீகார் ராணுவ போலீசும், வெளிவட்டத்தில் மாவட்ட போலீசும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். பாதுகாப்பது பணியில் துணை ராணுவத்தினர் மட்டும் சுமார் 8 ஆயிரம்பேர் ஈடுபடுவார்கள். ஓட்டு எண்ணும் மையங்களிலும், அந்...